டேக் ஓ.கே!

ஸீன்-1

"டாக்டர்' பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக "பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார் விஜய். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். "சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

Advertisment

cc

இப்படத்தைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். சமீபத்தில் இப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தில் நடிகர் நானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவின் மகள் சித்தாராவும் இப்படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. வம்சி, தெலுங்கிலும் மிகப்பெரிய இயக்குநர் என்பதால், இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட வாய்ப்புள்ளது. இதனால், இரு மொழிகளிலும் பிரபலமான நடிகையை ஹீரோயினாக்க முடிவெடுத்த படக்குழு, தற்போது கீர்த்தி சுரேஷை இப்படத்தில் நடிக்க வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. "பைரவா', "சர்க்கார்' என ஏற்கனவே விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். எனவே, படத்திற்கு இது கூடுதல் ப்ளஸ்ஸாக அமையும் என்பதால், விஜய்க்கு ஜோடியாக நடிப்பது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷுடன் பேச்சுவார்த்தை நடந்துள் ளது. மேலும், விஜய் இந்தப் படத்தை முடித்தபின், மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளார் என்ற புதிய செய்திகளும் கோலிவுட் வட்டாரத்தைச் சமீபத்தில் சுற்றிவர ஆரம்பித்துள்ளன.

ஸீன்-2

விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தெலுங்குப் படம் "பெல்லி சூப்புலு'. தருண் பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்திற்கு தெலுங்கில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்தி மற்றும் மலையாளத்திலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ரீமேக்குகளிலும் இப்படம் வெற்றிபெற, இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டி போட்டன. அதில், இயக்குநர் கௌதம்மேனன் இப்படத்திற்கான தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார்.

cc

Advertisment

இதனைத் தொடர்ந்து, விஷ்ணுவிஷால், தமன்னா வை வைத்து இப்படத்தைத் தயாரிப்பதாக கௌதம் மேனன் அறிவித்தாலும், பணப் பிரச்சினை, நடிகர்கள் கால்ஷீட் பிரச்சினை என பல்வேறு காரணங்களால் இப்படம் தடைப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர், அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஷ்கல்யாண், பிரியா பவானிசங்கர் நடிப்பில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றது. சென்னையிலேயே ஒரேகட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, இறுதிகட்டப் பணிகளையும் தற்போது முடித்துள்ளது. ‘"ஓ மணப்பெண்ணே'’ எனப் பெயரிடப் பட்டுள்ள இப்படம், நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளதாக நீண்ட நாட் களாகக் கூறப்பட்டு வந்தாலும், இதற் கான பேச்சுவார்த்தை முடிவுறாத தால், ரிலீஸ் தேதி இழுத்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி யைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 22-ஆம் தேதி "ஓ மணப்பெண்ணே' திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே பல மொழிகளில் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றிபெற்ற இந்தப் படம், தமிழிலும் அந்த மேஜிக்கை நிகழ்த்துமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஸீன்-2

சிவகார்த்திகேயன், மாகாபா, கவின் வரிசையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோ வாக அறிமுகமாகவுள்ளார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. அசிஸ்டென்ட் கோரியோகிராபராக இருந்து, பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, பின்னர் டான்ஸ் மாஸ்டராக திரைத்துறைக்குள் வந்தவர் சாண்டி. அவ்வப்போது சிறுசிறு வேடங்கள் மூலம் திரையில் தலைகாட்டி வந்த இவர், தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து, அப்படம் ரிலீஸுக்கும் தயாராகியுள்ளது.

நம்பிக்கை சந்துரு இயக் கத்தில் "3.33' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாண்டிக்கு ஜோடியாக ஸ்ருதி செல்வம் என்பவர் நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில், கௌதம்மேனன் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள் ளார். முழுக்க முழுக்க ஒரு வீட்டிற்குள் ளேயே நடக்கும் வகையில் எடுக்கப் பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களி டையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ள சூழலில்... வரும் அக்டோபர் 21-ம் தேதியன்று திரையரங்கு களில் வெளியாகவுள்ளது.

-எம்.கே.